தமிழ்நாட்டு மானுடா !! தலை நிமிர்ந்து நில்லடா !!
சேர சோழ பாண்டியர்கள்..
எங்கும் வெற்றிக் கொடி நாட்ட !!
முச்சங்கம் வளர்த்த புலவர்கள்..
வைரத்தமிழை பொன்னில் பூட்ட !!
பாயும் புலியே வந்து நின்றாலும்..
முறத்தால் அடித்த பெண்கள் !!
துளைக்கும் குண்டுகள் வெடித்தாலும்..
கட்டபொம்மனின் அசையா கண்கள் !!
தன உயிரை விடவும் துணிந்து..
வெள்ளையனை வீழ்த்திய வாஞ்சி நாதன் !!
தாய் மணிக்கொடியை துறக்க மறுத்து..
தன உயிர் துறந்த திருப்பூர் குமரன் !!
முக்கண்ணனே எதிரில் நின்றும், குற்றம்..
குற்றமே என்ற நக்கீரன் !!
பாவம் என்ற பயம் தொடுத்தும்..
மதில்சுவர் ஏறிய இராமானுஜன் !!
தானம் போற்றும் கல்வெட்டு, மறவர்..
வீரம் உரைக்கும் ஜல்லிக்கட்டு !!
தமிழா ! வீரம் வழி வந்த வேங்கை நீ !!
கதிரவன் உன்னை சுட்டெரித்தாலும்..
கண்களை நீ மூடாதே !!
தலையில் மலையையே வைத்தாலும்..
தலை மட்டும் நீ தாழாதே !!

சேர சோழ பாண்டியர்கள்..
எங்கும் வெற்றிக் கொடி நாட்ட !!
முச்சங்கம் வளர்த்த புலவர்கள்..
வைரத்தமிழை பொன்னில் பூட்ட !!
பாயும் புலியே வந்து நின்றாலும்..
முறத்தால் அடித்த பெண்கள் !!
துளைக்கும் குண்டுகள் வெடித்தாலும்..
கட்டபொம்மனின் அசையா கண்கள் !!
தன உயிரை விடவும் துணிந்து..
வெள்ளையனை வீழ்த்திய வாஞ்சி நாதன் !!
தாய் மணிக்கொடியை துறக்க மறுத்து..
தன உயிர் துறந்த திருப்பூர் குமரன் !!
முக்கண்ணனே எதிரில் நின்றும், குற்றம்..
குற்றமே என்ற நக்கீரன் !!
பாவம் என்ற பயம் தொடுத்தும்..
மதில்சுவர் ஏறிய இராமானுஜன் !!
தானம் போற்றும் கல்வெட்டு, மறவர்..
வீரம் உரைக்கும் ஜல்லிக்கட்டு !!
தமிழா ! வீரம் வழி வந்த வேங்கை நீ !!
கதிரவன் உன்னை சுட்டெரித்தாலும்..
கண்களை நீ மூடாதே !!
தலையில் மலையையே வைத்தாலும்..
தலை மட்டும் நீ தாழாதே !!

No comments:
Post a Comment