Monday, July 25, 2011

வர்ணனை செய்ய வார்த்தைகள் எங்கே??

உன் வெட்கம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..
உலக மொழிகளின் அகராதிகளில்..
இயற்கையிடம் கடன் கேட்டேன்..
இயற்கையும் தேட ஆரம்பித்தது..

நிலாவிடம் சம்மதம் கேட்கப்பட்டது..
வெண்ணிலவு தயக்கம் காட்டியது..
உன் முக வெளிச்சத்தில்..
அது காணாமல் போகுமோ என்று..

கடலிடம் அனுமதி கேட்டது..
அலைகள் பயந்து உள்வாங்கின..
உன் கண்ணொளி வீச்சில்..
கடல் வற்றிப் போகுமோ என்று..

நட்சத்திரத்திடம் கேட்டுப் பார்த்தது..
மாநாடு நடத்திய நட்சத்திரங்கள்..
உன் புன்சிரிப்பின் அழகைக் கண்டு..
மின்மினிகளாய் உதிர்ந்து கொட்டின....

பவழப் பாறையிடம் மனு செய்தது..
சற்று முன்வந்த பவழங்கள்..
உன் இதழசைவைக் கண்டு..
கடலுக்குள் கரைந்து போயின..

தேடித் தேடி அலுத்த இயற்கை..
தானே முன்வர முடிவெடுத்தது..
உன்னை ஒரு முறை பார்க்க விழைந்தது..
உன் வீட்டிற்கு அழைத்து வந்தேன்..

இளஞ்சூடான காலை பொழுது..
தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்தாய்..
சூரிய கதிர்கள் உன் மேனியில் படர்ந்தவுடன்..
உன் முனுகள் சத்தமும் கேட்டது..

செல்லமாய் ஒரு சோம்பல் முறித்து..
மெல்ல நீ எழுந்தாய்..
திகைத்து நின்ற என்னருகே..
வழிந்தோடியது ஒரு திரவம்..

என்னவென்று பார்த்த எனக்கு..
சட்டென்று ஒரு அதிர்ச்சி..
உன்னைப் பார்த்த அந்த நொடி..
உருகிப் போயிருந்தது இயற்கை..

என்னிடம் வார்த்தைகள் இல்லை என்ற இயற்கை..
ஓடி ஒலிந்தது பூக்களின் நடுவே..
செய்வது அறியாத நான்..
இன்னமும் தேடி கொண்டிருக்கின்றேன் சொற்களை..

 

No comments:

Post a Comment